அரசு நடத்தும் 3 மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 06:25 pm
provisional-ban-on-3-quarries-in-amaravati-river

கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் அரசு நடத்தி வரும் 3 அரசு மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் சாணப்பிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தங்கள் கிராமத்தின் வழியாக பாயும் அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு காரணமாக ஏற்கனவே மணல் அளவு குறைந்துள்ளதாகவும், இந்நிலையில், கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய கிராமங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அரசு மணல் குவாரிகளில் நிர்ணயிக்கபட்ட அளவை விட அதிகளவில் மணல் அள்ளபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதாளபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், குடிநீர் தட்டுபாடும் நிலவி வருவதால் அரசு மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்பட இடைகால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close