இடைக்கால பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் என்ன சொன்னார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 04:55 pm
ttv-dinakaran-s-opinion-about-budget-2019

வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளதை அடுத்து அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டின் அம்சங்களை பாஜகவினர் கொண்டாடி வரும் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பான ஒரு அறிக்கையையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அறிக்கை பின்வருமாறு: 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close