ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 11:21 am

the-chief-minister-laid-the-foundation-stone-for-3-new-bridges

சேலத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலப்பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

சேலம் கந்தம்பட்டியில் நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் சார்பில் செவ்வாய்பேட்டை - இளம்பிள்ளை சாலை கந்தம்பட்டி சந்திப்பில்  ரூ.33.00 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் அமைக்கவும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் புழுதிக்குட்டை - சந்துமலை சாலை புங்கமடுவு அருகில் ரூ.3.50 கோடி மதிப்பில் உயர்மட்டபாலம் அமைக்கவும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அயோத்தியாப்பட்டிணம் - பேளூர் - கிளாக்காடு சாலையில் தும்பல் அருகில் ரூ.3.50 கோடி மதிப்பில் உயர்மட்டபாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.12.26 கோடி மதிப்பில் 4,049 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close