தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணியா? - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 11:10 am
pon-radha-krishnan-press-meet

பா.ஜ.க தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என நாங்கள் சொல்லவில்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு தான் சஇந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அரசியல் கண்ணோட்டத்தோடு எதிர்க்கட்சிகள் பார்ப்பதால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்றார்.

மேலும், 'தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையுமா?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என நாங்கள் சொல்லவில்லை. பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close