வைகோவால் கவுன்சிலர் ஆக முடியுமா? எச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 01:34 pm
can-vaiko-become-a-councilor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கலிங்கப்பட்டியில் வார்டு கவுன்சிலர் ஆக முடியுமா என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை விருகம்பாக்கம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான வெட்டுக் குளத்தை  மீட்க போராட்டம்  நடைப்பெற்று வரும் நிலையில், அந்த இடத்தை பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பார்வையிட்டர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "1997ல் குளமாக இருந்த இடத்தில்,காங்கிரஸ் மசூதி கட்ட முயற்சி செய்ததாகவும், அதன் பின் உயர் நீதிமன்றம் இந்த இடம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தீர்ப்பு அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் 2015ல் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தும், இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை என கூறினார். 

வைகோவால் கலிங்கப்பட்டியில் அவருடைய வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் மோடி பற்றி பேச வைகோவிற்கு  என்ன தகுதி இருக்கிறது என்றார்.  மேலும் டெல்லியில் பேசுவதால் வைகோ தேசிய தலைவராக ஆக முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஓட்டுக்கு தான் இந்த இடைக்கால பட்ஜெட் என்ற பா.சிதம்பரம் கருத்துக்கு பதிலளித்த அவர், சிதம்பரம் அடிக்கடி சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மன்னித்துவிடலாம் என கூறினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபோது கஜானா காலியாக இருந்ததாகவும், தற்போதுள்ள ஆட்சியில் பல கோடி வாரா கடன்களை வரவைத்துள்ளதாகவும் ஹச். ராஜா தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close