சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரிய நிலையில், ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ளார். அவரது கூட்டாளியான மனோஜ் அரோராவை கைது செய்வதற்கு பிப்ரவரி 6 வரை தடை விதித்து ஏற்கனவே டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.
இந்நிலையில், ராபர்ட் வதேராவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வந்த நிலையில், வதேராவின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
newstm.in