அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், " தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதன், காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் அதிகபட்சம் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in