மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று உளறுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 04:05 pm
minister-sellur-raju-byte

திமுக தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று உளறிக்கொண்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "அமைச்சர்களை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம். ஆனால் கூட்டணி குறித்து தலைமை தான்  முடிவெடுக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும். 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். 

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. ஊர் ஊராக சென்று உளறிக்கொண்டிருக்கிறார். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது எந்த ஒரு ஊருக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்கவில்லை. கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார்.

மத்திய அரசின் பட்ஜெட் என்னுடைய பார்வையில் மிக சிறப்பாக வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் சேவைக்கு வரும். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருவதற்கு முன் கோவில் பழைய நிலைமைக்குத் திரும்பும்" இவ்வாறு கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close