தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 08:03 am
tn-congress-president-appointed-by-rahul-gandhi

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.  அதேபோன்று தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தலைவர்கள் நியமனம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் செயல் தலைவர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கே.எஸ். அழகிரி இரண்டு முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‛ருநாவுக்கரசருக்கான இடம் காங்கிரஸில் எப்போதும் இருக்கும் எனவும்,  தன்னை தேர்வு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close