அறிஞர் அண்ணாவின் 50ம் ஆண்டு நினைவு தினம்: திமுகவினர் அமைதிப்பேரணி!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 10:44 am
mk-stalin-pays-his-tribute-to-arignar-anna

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் சென்னை மெரினா நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் வரை பேரணியாக திமுகவினர் அணிவகுத்து சென்றனர். இந்த அமைதிப் பேரணியில் ஸ்டாலினுடன், துரைமுருகன், டி.ஆர் பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்தில் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பிரமுகர்கள் என அனைவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர்பக்கத்தில், "'மாநில சுயாட்சி'க்கு முதன்முதலில் வித்திட்ட தலைவர்! இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்தவர்! சிந்தனையில் செறிவு! அணுகுமுறையில் எளிமை! தலைவர் கலைஞரின் அண்ணன்! பேரறிஞர் அண்ணாவின் புகழை எந்நாளும் போற்றிடுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close