அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 02:16 pm

admk-pays-their-tribute-to-arignar-anna

அறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிடக்கழகத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களுடன் வந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

அதைத்தொடர்ந்து தற்போது அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, மதுசூதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

newstm.in

 

 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close