திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 10:29 am
jallikattu-event-held-on-thiruppur

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 2வது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்த போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

இதில் 500 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கமும் இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close