ப.சிதம்பரம் - கே.எஸ்.அழகிரி சந்திப்பு! தேர்தல் குறித்த ஆலோசனை?

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 12:29 pm
p-chidambaram-ks-alagiri-meet-at-chennai

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி,  தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் செயல் தலைவர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது உடன் கார்த்தி சிதம்பரம், கராத்தே தியாகராஜன்,  கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close