500 மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 01:39 pm
free-ias-training-for-500-students

யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் அமைப்பட்டுள்ள அம்மா  ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், " 3 ஆண்டு கால கடுமையான முயற்சியால் தற்போது இந்த அகாடெமி திறக்கப்பட்டு உள்ளது. சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகம் என பல்வேறு திட்டங்களை எந்த மாநில முதல்வரும் வழங்காத வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். அவர் பெயரில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. 

முக்கியமான படிப்பான யு.பி.எஸ்.சி.யை எழை, எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களது கனவை நினைவாக்கும் வகையில் இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்சி முதல் நிலை நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வருடத்திற்கு  500 மாணவர்கள் இந்த பயிற்சி மையம் மூலம் பயன்பெறுவார்கள்" இவ்வாறு கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close