சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப்படுமா? - வனத்துறை அமைச்சர் பதில்

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 01:39 pm
minister-dindugul-seenivasan-press-meet

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் கூறியது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "வனத்துறையினரால் காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை தற்போது மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. நடுக்காட்டில் விடப்பட்ட யானை மறுபடியும் 80 கிலோ மீட்டர் நடந்து வந்து உடுமலை பக்கம் கோவை மாவட்டத்துக்குள் வந்துள்ளது. 

அது காட்டில் சாப்பிடுவதை விட்டு விட்டு ஊருக்குள் உள்ள தீவணங்களை சாப்பிட்டு பழகியதால் உள்ளே போக மறுக்கிறது. அதனால் வனத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்து இதை கும்கியாக மாற்றி யானைகளுடன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். இல்லை என்றால் இந்த யானை மக்களுக்கு துன்பம் கொடுக்கும் என்று சொன்னார்கள். இந்த யானை கும்கியாக போய் சேர்ந்தால், யானைக் கூட்டங்களுடன் இருந்தால் நல்லபடியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இப்போது சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டுக்குள் கொண்டுபோய் விட வேண்டும்.  கும்கியாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கை தான். அதுகுறித்து வனத்துறையினரிடம் பரிசீலிக்கப்படும்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close