விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க முதல்வர் வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 02:48 pm
road-safety-week-will-be-observed-from-2019-february-4-to-10

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை 30வது சாலைப் பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுவதையொட்டி, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சாலைப் பாதுகாப்பு - உயிர்ப் பாதுகாப்பு" என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலைப் பாதுகாப்பு வாரவிழா ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள், சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 

சாலை பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.65 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும், 2017ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் சாலை விபத்துகள் 3% குறைந்துள்ளதாகவும், இறப்பு விகிதம் 25% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் மூன்று காவல் துறை ஆணையகத்திற்கு முதலமைச்சர் விருது வழங்கப்படும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close