மெஸ்ஸி அதிரடியில் தப்பியது பார்சிலோனா!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 04:40 pm
messi-magic-saves-barcelona-again

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் தொடரில், பார்சிலோனா வாலென்சியா அணிகள் மோதிய போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால், பார்சிலோனா 2-2 என டிரா செய்து தோல்வியிலிருந்து தப்பியது. 

ஸ்பெயின் நாட்டின் லீக் தொடரான லா லிகாவில், பார்சிலோனா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கும் பார்சிலோனாவுக்கும் இடையே 6 புள்ளிகள் வித்தியாசம் இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா, வாலென்சியாவுடன் மோதியது.

வாலென்சியா அணி, அசத்தலாக விளையாடி சிறப்பான துவக்கத்தை பெற்றது. அந்த அணியின் கமேரோ, 24வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். சிறிது நேரத்திலேயே, வாலென்சியா வீரரை பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபர்டோ பவுல் செய்ய, அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், கேப்டன் பரேஹோ கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். முதல் பாதி முடிவதற்கு  சில நிமிடங்களுக்கு முன், பார்சிலோனா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் மெஸ்ஸி கோல் அடிக்க, 2-1 என முதல் பாதி முடிந்தது. 

இரண்டாவது பாதியில் பார்சிலோனா பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்கமுடியவில்லை. 64வது நிமிடத்தில், 4 வீரர்கள் சுற்றியிருந்த போதும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அசத்தலான ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இறுதியில் போட்டி 2-2 என முடிந்தது. டிரா ஆனதால், பார்சிலோனாவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. இன்று நடைபெறும் போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ள அட்லெடிகோ அணி வெற்றி பெற்றால், 7 புள்ளிகளாக உள்ள  பார்சிலோனாவின் முன்னிலை 4ஆக குறையும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close