தமிழ்நாட்டையே தலைகுனிய வைக்கும் சிங்கப்பூர்...!

  அனிதா   | Last Modified : 04 Feb, 2019 09:33 am
tamil-in-singapore

தமிழ்நாட்டையே தலைகுனிய வைக்கும் வகையில், தமிழ் மொழியால் நிரம்பியிருக்கும் சிங்கப்பூர் விமான நிலையம்..

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது  தமிழ் மொழி. உலக அளவில் தற்போது கிட்டத்தட்ட 6000 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழமையான மொழியாக கருதப்படுவது தமிழ். சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மொழியாக தமிழ் விளங்கி வருகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்னும் மொழிகளை உருவாக்கி செம்மொழியாக இன்றும் முதலிடம் வகிக்கிறது. 

இத்தகைய தமிழ் தமிழகத்தின் தாய் மொழியாக இருப்பது சிறப்பிலும் சிறப்பு.. ஆனால், உலகமே போற்றும் தமிழ் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மறைந்து வருகிறதோ என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழ ஆரம்பித்துவிட்டது. தமிழர்களே தமிழில் பேசுவதும் அரிதாகிவிட்டது. முன்னோர்கள், காப்பியங்கள் வாயிலாகவும், நூல்கள் வாயிலாகவும் தமிழின் பெருமையை நமக்காக விட்டு சென்றுள்ளனர். 

ஆனால், தமிழ் மொழிக்கு சொந்தமான நாம்.. அந்த மொழிக்கு எந்த அளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம்..."யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற பாரதியின் எழுச்சி கவிதையோடு தமிழ் நின்றுவிடக் கூடாது. தமிழ் நமது தாய் மொழியாக இருப்பதால் கூட அதன் பெருமைகள் நம்மில் சில பேருக்கு தெரிவதில்லை. ஆனால் அந்நிய நாடான சிங்கப்பூர் தமிழுக்கு உரிய இடத்தை அளித்துள்ளது. 

அதாவது, உலகே போற்றும் தமிழ் மொழியின் சிறப்பை இன்றும் பறைசாற்றுகிறது சிங்கப்பூர். ஆம். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.  விமான நிலையம் முழுவதும் தமிழ் எழுத்துக்களால் நிறைந்திருப்பது  புத்துணர்ச்சியையும், தமிழன் என்ற பெருமையையும் ஏற்படுத்துகிறது. தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் சிங்கப்பூருக்கு தலை வணங்குவோம்..

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close