பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது நல்லதல்ல: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 07:41 pm
it-is-not-good-to-show-black-flag-against-the-prime-minister

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது தமிழகத்திற்கு நல்லதல்ல என  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

கோவையில், பா.ஜ.க  கட்சியின் கோவை, பொள்ளாச்சி , நீலகிரி, திருப்பூர் ஆகிய  நான்கு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம்   நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " ரபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் எனக் கூறி எதிர்கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், நாங்கள் உண்மையை கூறி அதனை பொய் பிரச்சாரம் என நிரூபிப்போம். சி.பி.ஐ இயக்குனர் நியமிக்கும் நடைமுறைக்கு  
மல்லிகார்ஜுன கார்கே  ஒத்துழைக்காமல், தற்போது நியமித்த பின்  வீணாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் வழங்க எல்லா உரிமையும் அரசுக்கு உள்ளது. மக்களுக்கு உகந்த அம்சங்கள்  இருப்பதால்  அதை ஜீரணிக்க முடியாமல், இதனை தேர்தல் அறிக்கை என விமர்சிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குது, விவசாயிகளை சிறுமைபடுத்தும் செயல் என ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இல்லாத போது அங்கு மட்டும் எப்படி தட்டுப்பாடு வந்தது

ஜி.எஸ்.டி க்குள் பெட்ரோலியம் வர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ஆனால் ஜி எஸ் டி கவுன்சிலில் பல மாநிலங்கள் அதை எதிர்க்கிறார்கள். ஜி எஸ் டி மூலம் மாநில அரசுக்கு  இழப்பு என்றால் மத்திய அரசு அதனை சரி கட்டும் என  பியூஷ் கோயல் பட்ஜெட்டில் கூறியுள்ளார். ஜல்லிகட்டு நடக்காமல் இருந்ததற்கு காளைகளை   விலங்கின  பட்டியலில் சேர்த்தது தான் காரணம். அவ்வாறு செய்தது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்,  திமுக கூட்டணி தான்.  

பிரதமருக்கு எதிராக கருப்புகொடி போராட்டங்கள் தமிழகத்திற்கு நல்லதல்ல. ஜனநாயம் என்ற பெயரை வைத்துக்கொண்டு  எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கருப்புக் கொடி காட்டும் அளவிற்கு முக்கிய பிரச்சனை என்றால் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதித்து பதில் பெறவேண்டும், இவ்வாறு கருப்பு கொடி காட்டிவிட்டு,  வீட்டில் போய் உட்கார்ந்து விட்டால்  ஒன்றும்  நடக்காது" என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close