மக்களவை தேர்தல்: அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 10:46 am

admk-parliament-election-application-distribution

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப விநியோகத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விண்ணப்பம் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்ப விநியோகத்தை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இன்று முதல் வரும் 10ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்றும், ரூ.25,000 செலுத்தி விருப்பமனுவிற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close