சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? - தமிழிசை அதிரடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 11:16 am
tamilisai-talks-about-mamata-banerjee

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? மேற்குவங்க அரசு பாஜக பரப்புரைக்கு அனுமதி மறுத்தாலும் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். விசாரிக்க சென்ற ஓவர் சிபிஐ அதிகாரியை பிடித்து வைத்துள்ளது அவர்களது மோசமான அரசியலுக்கு ஒரு முன்னுதாரணம். சிபிஐ அதிகாரிகள் யாரையும் சாராதவர்கள். சட்டப்படி அவர்களுக்கென்று ஒரு அதிகாரம் உள்ளது. அவர்கள் விசாரணைக்கு தான் அங்கு சென்றனர். அதை தவறாகப் புரிந்து கொண்டு மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக அமித்ஷாவின் ஹெலிகாப்டரை தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, பாஜக பரப்புரை செய்யவும் அம்மாநில அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாங்கள் பிரம்மாண்ட முறையில் பிரச்சாரத்தை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறோம். எங்கு என்ன தடை வந்தாலும் பாஜக தங்களது பிரச்சாரத்தை தொடரும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்று அதிரடியாக பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close