சைதை துரைசாமிக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்து; இங்கிலாந்து இளவரசர் அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:45 pm
england-prince-invites-saidai-duraisamy

மனித நேயம் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் சேவையை பாராட்டும் பொருட்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரை விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். 

இந்தியாவில் மிகக் கடினமான போட்டி தேர்வான 'சிவில் சர்வீஸ் தேர்வு'க்கு மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. 'மனித நேயம் இலவச ஐஏஎஸ் தேர்வு பயிற்' மையம் சார்பில் இதுவரை ஏராளமான மாணவர்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை அதிகாரிகளாக இந்த அமைப்பு உருவாக்கி வருகிறது. 

இதுதவிர, அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். தான் கட்டிய ஒரு திருமண மண்டபத்தையும் எளிய மக்களுக்காக அவர் பயன்படுத்தி வருகிறார். 

மேலும், ஏழை மக்களுக்காக இறந்தவர்களை பதப்படுத்த 30 இலவச குளிர்சாதனப்பெட்டிகளை தந்து உதவி வருகிறார்.

இந்நிலையில், இவரது சிறந்த சேவையை பாராட்டும் பொருட்டு இங்கிலாந்திலுள்ள பக்கிங்காம் அரண்மனையில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி அவருக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் அந்நாட்டின் இளவரசர் சார்லஸ். சைதை துரைசாமிக்கு லண்டன் வருமாறு அழைப்பு இங்கிலாந்து இளவரசரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 

இதையடுத்து விருந்தில் பங்கேற்கும் பொருட்டு, சைதை துரைசாமி இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறார். அவரது மகனும், மனிதநேயம் அறக்கட்டளை இயக்குநருமான வெற்றி துரைசாமியும் அவருடன் லண்டன் செல்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close