முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு! - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 01:14 pm
minister-balakrishna-reddy-case-hearing-at-sc

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அருகே நடந்த போராட்டத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார்.

இதையடுத்து, அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், தண்டனையை நிறுத்த நீதிமன்றம் மறுத்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close