மேற்குவங்க மாநில விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 01:21 pm
rajnath-singh-explanation-in-ls-about-west-bengal-issue

மேற்குவங்க மாநில விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தார். சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாகவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நேற்று மேற்குவங்கம் சென்றதாக அவர் தெரிவித்தார். 

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் வாரண்ட் இல்லை என்று கூறி மாநில போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும், முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு விரைந்து சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் மூலம் மேற்கு வங்க மாநில ஆட்சியை கவிழ்க்க, மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்றிரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து, மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க மாநில ஆளுநர் கே.என். திரிபாதியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். 

தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாகவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நேற்று மேற்குவங்கம் சென்றுள்ளனர். இந்த நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிதி மோசடி விவகாரம் புதிரானது அல்ல. ஏற்கனவே விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு. ஆனால் சிபிஐ அதிகாரிகள் தங்களது வேலையை செய்ய மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இது சிபிஐ விசாரணை என்பது சட்டத்திற்கு விரோதமானது அல்ல" என்று விளக்கமளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close