சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிந்தும் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 03:00 pm
road-safety-awareness

சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிந்தும் பணம் வசூல் செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். 

போக்குவரத்து துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சாலை பாதுகாப்பு குறித்து இந்த பேரணியின் வாயிலாக மட்டும் அல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 25% விபத்துகள் குறைந்துள்ளது. விபத்துக்கள் அதிகம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விபத்துகளை தடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இது போன்ற சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம், நம் நாட்டில் அதிகளவில் வாகனங்களை பயன்படுத்தி வருவதால் அதிக கட்டுபாடுகளை விதிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சுங்கச்சாவடிகளில்  ஒப்பந்தம் முடிந்தும் பணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close