ராகுல் என்னை அழைத்து பேசியதே மகிழ்ச்சி: பதவி நீக்கம் குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 04:32 pm
thirunavukarasar-press-meet-after-he-meets-rahul-gandhi

ராகுல்காந்தி என்னை அழைத்து பேசியதே மகிழ்ச்சி; காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் காட்டுப்படுவோம் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், "தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எனது வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் காட்டுப்படுவோம். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றியது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திக்கும் வரை வருத்தம் இருந்திருக்கலாம். இப்போது எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

இதுவரை எத்தனையோ தலைவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அவர்களை அழைத்து பேசியதில்லை. ஆனால் ராகுல்காந்தி என்னை அழைத்து பேசியதே மகிழ்ச்சி. அதேபோன்று காங்கிரஸ் தலைவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுவார்கள். நான் இரண்டரை ஆண்டுகளாக பதவியில் இருக்கிறேன். அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து காங்கிரஸ் தொண்டராக பணியாற்றுவேன். நான் தலைவர் பொறுப்பில் இருந்தபோது ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ராகுல் காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். இல்லையென்றால் கட்சிக்காக பணியாற்றுவேன். ராகுல்காந்தி எனக்கு சில பணிகளை கொடுத்துள்ளார். அதன்படி செயல்படுவேன்" என்றார். 

தொடர்ந்து ரஜினி சந்திப்பு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு, "ரஜினி எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டிய அவசியமில்லை" என்று பதிலளித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close