கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 05:43 pm
the-government-of-india-has-approved-for-the-excavation-at-keezhadi-for-the-field-season-2018-19

கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். 

மதுரை–சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வசித்த வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அடையாள சின்னங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வுக்கான நிதியை ஒதுக்காததால், இக்கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா வெளியிட்டுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close