தாய் சேய் நல வாகன சேவைக்காக 15 புதிய வாகனங்கள்: முதலமைச்சர் துவக்கி வைத்தார் !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 06:05 pm
15-new-vehicles-for-maternity-service-inaugurated-by-cm

தாய் சேய் நல வாகன சேவைக்காக 15 புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.  அப்போது அவர், தாய்-சேய் நல வாகன சேவைக்காக வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

அதனை தொடர்ந்து 72 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோருக்கு பணிநியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.  இந்த நிகழ்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close