பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கினாரா? ஸ்டாலின் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:28 am
stalin-question-about-aims-found

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அதற்கு நிதி ஒதுக்கியுள்ளாரா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும்  கிராம சபைக் கூட்டம் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தின் வரலாற்றை எடுத்து சொல்லும் கீழடி ஊராட்சிக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மண்ணில் நிற்பதையும், நடப்பதையும் பெருமையாக கருதுகிறேன். டிவி சீரியல்களை பார்ப்பதை விட்டுவிட்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்து வந்திருக்கும் தாய்மார்களை வணங்குகிறேன்.

தமிழர்களின் வரலாற்று பெருமையை மறைக்க பாஜக தலைமையிலான அரசு முயற்சி செய்கிறது. அதனால் தான் கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிடம் மாற்றியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த வாரம் அடிக்கல் நாட்டிய பிரதமர் அதற்கு நிதி ஒதுக்கியுள்ளாரா? தமிழகத்தில் 11 மாவட்டங்களை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதாக கூறிய பிரதமர், அவ்வாறு செய்துள்ளா? பிரதமர் மோடி கலர் கலராக தொப்பி போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்" என்று கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close