நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக- காங்., கூட்டணி வெற்றி பெறும்: ஈ.வி.கே.எஸ்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:38 am
dmk-cong-coalition-will-win-in-40-constituencies

நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியில் புதிதாக திறக்கப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் டெபாசிட் வாங்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், கொங்கு மண்டலத்திற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் வெற்றி பெற முடியாது என கூறிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close