தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும்: மம்தா போராட்டம் குறித்து கமல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 02:45 pm
kamalhassan-about-mamata-protest

மம்தா பேனர்ஜி தற்போது மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்துவது போல தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மேற்குவங்க காவல்துறை ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி முதல்வர் மம்தா பானர்ஜியே சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை என்றும் சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close