வழக்குகளை திரும்பப்பெற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தல் !

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 03:57 pm
jacotto-geo-and-ops-meet

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். 

ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் கடந்த ஜன.22ம் தேதி முதல் 30ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். 

ஏற்கனவே, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையனை நேற்று சந்தித்த நிலையில், இன்று துணை முதலமைச்சரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close