பொது நல மனுவில் எதிர் மனுதாரராக தலைமைச் செயலாளரை சேர்க்க வேண்டாம்: நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 04:40 pm
do-not-include-the-chief-secretary-as-a-counter-petitioner

அனைத்து பொது நல மனுவிலும் எதிர் மனுதாரராக தலைமைச் செயலாளரை சேர்க்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நெல்லையை சேர்ந்த செல்வின் ஜோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து பொது நல மனுவிலும் எதிர் மனுதாரராக தலைமைச்செயலாளரை சேர்க்க வேண்டாம் என்றும் தலைமைச்செயலாளர் பதில் தேவை என்ற நிலை இருந்தால் மட்டுமே சேர்த்தால் போதும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அனைத்து பொதுநல வழக்கிலும் தலைமைச் செயலாளர் பெயரை சேர்க்க கூடாது என்று பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் நீதிமன்றமே எதிர் மனுதாரராக சேர்த்து கொள்ளும் என்றும் தெரிவித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close