மதசார்பின்மை பற்றி பேசும் ஸ்டாலின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா? தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:34 pm
is-it-right-to-insult-wedding-ritual-tamilisai

மதசார்பின்மை பற்றி பேசும் மு.க.ஸ்டாலின் இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10 ம் தேதி பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள வாஜ்பாய் திடலினை பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் , மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், " வரும் 10 ம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வோடு பாஜக பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.  வாக்குச்சாவடி அளவிற்கு பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துவரும் பாஜகவை கிண்டலடிப்பவர்களுக்கு தங்கள் பணிகளால் அவர்களின் கேலிகளை முறியடிப்போம் என கூறிய அவர், மதசார்பின்மை பற்றி பேசும் ஸ்டாலின் இந்துக்களின் திருமண சடங்கை அவதூறாக விமர்சிப்பது சரியா என கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜகதான் மதசார்பின்மை பற்றி பேசும் கட்சி என தெரிவித்த அவர்,  50 வருடமாக ஏழைகளை பற்றி சிந்திக்காத ராகுல் திடீரென ஏழைகளை பற்றி சிந்திப்பதாகவும் கூறினார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ள பாஜக அரசு இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்க உள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close