மகன் விருப்பமனு அளித்ததற்கு ஓபிஎஸ் விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 11:08 am
ops-description-for-son-s-election-affection

அதிமுகவினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு என்றும், அந்த வகையில் தான் தனது மகன் விருப்பமனு அளித்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு. அதன் அடிப்படையில் தான் எனது மகன் விருப்ப மனு அளித்துள்ளார்.  தகுதியும், திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்று, அனுமதித்தால் தொடர்ந்து நீடிக்கலாம் என தெரிவித்தார். 

மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் சென்று நடந்ததை கூறுவேன் என  தெரிவித்தார். 

முன்னதாக பேசிய அவர், கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close