அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு இந்த மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் : முதலமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 11:32 am
chief-minister-function

கோவையில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார்.

விவசாயிகளின் நலனுக்காக போராடி,பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் அமைக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கோவையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ரூ.1.50 கோடி நிதி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார். 

பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது திருவுருவசிலையை திறந்து வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தினார். விழாவில், பல்வேறு பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், அதிக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்றும், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் அமைக்கப்பட  உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றுவோம் எனவும், சென்னையில் ரூ. 2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close