கீழடி அகழாய்வில் பாஜக அரசு செய்ததை 5 முறை ஆண்ட திமுக ஏன் செய்யவில்லை? - தமிழிசை கேள்வி

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 11:43 am
tamilisai-soundararajan-questioned-mk-stalin

கீழடி அகழாய்வில், மோடி தலைமையிலான பாஜக அரசு செய்ததை 5 முறை ஆண்ட திமுக ஏன் செய்யவில்லை? என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரை–சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு நடத்தப்பட்டதில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வசித்த வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அடையாள சின்னங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து ஆய்வுக்கான நிதியை ஒதுக்காததால், அகழ்வாய்வு பணிகள் முடங்கின. 

இதையடுத்து கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றன. கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்  சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்குவாராம் ஸ்டாலின்? மோடிஅரசும் இந்துத்வா சக்திகள் கீழடி அகழாய்வை தடுத்து சதி செய்வதாக புரளி பரப்பியவர்கள் 4 கட்ட அகழ்வாய்வை முடித்து 5வது ஆய்வுக்கும் மோடி அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் பாஜக அரசு தோண்டி எடுத்ததை 5 முறை ஆண்ட திமுக ஏன் செய்யவில்லை.கீழடி ஆய்வை மோடி நிறுத்திவிட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்த நீங்கள் வைகோ!முத்தரசன்!திருமா!சுபவீ?மன்னிப்பு கேட்கவேண்டும்.செய்வீர்களா?.?.?" என்று கேட்டுள்ளார். 

 

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) February 6, 2019

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close