ஒரே எண்ணில் 2 பான் கார்டு: வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 12:43 pm
2-pan-cards-with-the-same-number-bank-officers-are-shocked

திருச்சியில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் ஒரே எண் கொண்ட பான் கார்டு இருந்ததால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, வங்கி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் செந்தில் குமார் தனிநபர் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார். கடன் வழங்குவதற்கு முன் வங்கி மேலாளர், செந்தில் குமாரின் பான் கார்டு எண்ணை சோதனை செய்த போது, அதே வங்கியில் வாடிக்கையாளராக இருக்கும் கீழவாளாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் செந்தில்குமார் என்பவரின் பான் கார்டும் ஒரே எண் கொண்டது என தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்த போது, தங்களது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் ஒன்றாக இருப்பதை அறிந்து வியந்தனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், ஊதியம் பிடித்தம் செய்வதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சமடைந்துள்ள அவர்கள், வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இது குறித்து தெரிவிக்கும் படி வங்கி மேலாளரிடம் அறிவுறுத்தியுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close