திருநாவுக்கரசர், திருமாவுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:28 pm
rajinikanth-meets-thirunavukarasar

தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.பின்னர், இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர். 

இந்நிலையில் சௌந்தர்யா வுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் விவாகரத்து பெற்றவர். 

தொடர்ந்து சௌந்தர்யாவின் திருமணம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  மிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

அதே சமயத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் , திருநாவுக்கரசரை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். இதனால் திருமாவளவன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய இருவரையும் ரஜினிகாந்த் சந்தித்து, தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரை நீக்கிவிட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இதனால் திருநாவுக்கரசர் விரக்தியில் இருப்பதாக கூறப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர், "ராகுல் காந்தி என்னை கைவிடமாட்டார். காங்கிரஸ் கட்சிக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

மேலும், ரஜினியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 'ரஜினி எனக்கு 40 ஆண்டு கால நண்பர். அவரை நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close