தலித்துகளை தாக்கும் ஸ்டாலின்: நடிகை கஸ்துாரி ‛சுளீர்’

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:30 pm
actress-kasthuri-replied-to-mk-stalin

சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய திருமணத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மத திருமண சடங்குகளையும், இந்து மதத்தையும் தரக்குறைவாக பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் இந்து மத அமைப்புகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், நடிகை கஸ்தூரி, ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் தனது முகநூல் பக்கத்தில், "தமிழர்களின் திருமணத்தில் சமஸ்க்ரிதம் எதற்கு என்று நிக்காஹ்வில் கேட்டவர், அந்த தமிழ் இஸ்லாமிய திருமணத்தில் எந்த மொழியில் சம்பிரதாயங்கள் அரங்கேறின என்று எடுத்து சொல்வாரா? அம்பேத்கர் அவர்கள் பின்பற்றிய பௌத்த மதத்தில் திருமணங்கள் சமஸ்க்ரித மொழி உச்சாடனங்கள் முழங்க நடத்தி வைக்கப்படுகின்றன. தமிழ் ஹிந்துக்களை சாடுவதை போல மறைமுகமாக தலித் மக்களை தாக்குகிறார் என்பது எத்தனை பேருக்கு புரிகிறது? 

தமிழக சர்ச் சடங்குகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் கூட பயன்படுகிறது. தமிழ்நாட்டின் ஆதிகுடிகளான தோடர் , படுகர் , குறும்பர் , குறவர் முதலானோர் தமிழர்களாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று தனித்துவமான மொழியை, வழக்கங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அதையும் குறை சொல்லுவாரா?

ஒவ்வொரு மத சம்ப்ரதாயத்துக்கும் ஒரு தொன்மையான மொழி உறவு இருக்கும். யூதர்கள் இன்று வரை hebrew மொழியை சம்பிரதாய மொழியாக பயன்படுத்துகிறார்கள். பார்சி சமூகத்து மக்கள் குஜராத்தியும், மராத்தியும் பேசினாலும் வழிபாட்டுக்கு அவெஸ்தன் மொழியை பயன்படுத்திகிறார்கள். திரு குர்ஆன் அரபி மொழியில் மட்டுமே ஓதப்படுகிறது. இது ஒவ்வொரு மதத்துக்கும் உள்ள சரித்திர சிறப்பேயன்றி பிழையில்லை.

அதே போல், ஆகமங்களில் காணப்படும் திருமண மந்திரங்கள் புராதன சமஸ்க்ரிதத்தில் உள்ளன. வேதங்கள் முழங்க, அக்கினி சாட்சியாக முப்பத்துமுக்கோடி தேவர்களை அழைத்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொள்ளும் நற்பேறு அனைவருக்கும் வாய்க்காது. இன்றைய காலகட்டத்தில், மேற்கத்திய நாட்டவர் கூட நமது இந்திய வைதிக திருமண சடங்குகளால் கவரப்பட்டு வேதமுறை திருமணம் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவ்வளவு அழகான பொருள் பதிந்த திருமண மந்திரங்கள், திருமண பந்தத்தை போற்றும் வரிகள். அதை விரும்புபவர்களை பழிப்பதும், ஆகம கூற்றுக்களை பொய்யான பழி கூறி கொச்சை படுத்துவதும் ஒரு பெருந்தலைவருக்கு அழகா?

பெயர்- ரஷ்ய மொழி.
உடுத்துவது- வெள்ளைக்கார மேல் சட்டை, உள் ஆடை. 
கார் : வெளிநாட்டு சொகுசு வண்டி.
மகள் நடத்தும் இங்கிலிஷ் மீடியம் பள்ளியின் பெயரும் ஆங்கிலம் தான்,
மகனின் சினிமா கம்பெனி பெயரும் ஆங்கிலம்தான்.
மனைவியோ காசியும் கொல்கத்தாவும் சென்று சாமி கும்பிட்டு கொண்டே இருக்கிறார். வடநாட்டில், வடமொழியில் ! 
தலைவர் சொல்வதை வீட்டில் உள்ளவர்களே பொருட்படுத்துவதில்லை, இவர் நாட்டில் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறார். .....
படிப்பது ராமாயணம் , இடிப்பது பெருமாள் கோவில் !" என்று பதிவிட்டுள்ளார். 

இவரது பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close