துண்டு, துண்டாக வெட்டிய பெண்ணின் உடல் கூவத்தில் மீட்பு..!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 09:54 pm

rescued-on-piece-of-women-s-body-part

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மற்ற உடல் பாகங்களை கூவத்தில் இருந்து மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த ஜன. 21ம் தேதி, இரும்பு கம்பிகளை சேகரிக்க வந்த நபர்கள் வெட்டப்பட்ட பெண்ணின் கை, மற்றும் கால்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், தலையும், உடலும் இல்லாததால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். 

பின்னர், விரல் ரேகை மூலம் அடையாளத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இறந்த செல்கள் மூலம் கைரேகை தெளிவாக பெறமுடியாததால் குழம்பி போய் இருந்த போலீசார், கடந்த 2 வாரமாக நடத்திய தீவிர விசாரணையின் மூலமும், ரகசிய தகவல் மூலமும் அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பதும், அவர் கணவர் பாலகிருஷ்ணனுடன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்ததும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குடும்ப தகராறு காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர் அளித்த வாக்கு மூலத்தின் மூலம் கூவம் ஆற்றில் வீசப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close