ஆங்கில பெயர்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 05:45 pm
no-more-english-names-in-tamilnadu

தமிழக ஊர்கள் மற்றும் தெருக்களுக்கு உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றவும், தமிழ் பெயர்களை ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றி பயன்படுத்துவதை நிறுத்தவும், தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல ஊர்கள், தெருக்களுக்கு இன்னும் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரப்பட்டு  வரும் நிலையில், கடந்த ஆண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் உறுதியளித்தார். தமிழகத்தில் உள்ள ஊர்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை தமிழில் மாற்ற ஒரு குழு நியமிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட நிர்வாக அமைச்சகங்கள் சேர்ந்து, தமிழ் மற்றும் ஆங்கில அறிஞர்களுடன் கலந்தாலோசித்து சமஸ்கிருதம், ஆங்கிலம் மொழிகளில் உள்ள பெயர்களுக்கு இணையான தமிழ்ப் பெயர்களை உருவாக்கினர்.

இது தொடர்பான ஆய்வு கூட்டம், தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை, வருவாய் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், நில அளவை பதிவேடுகள், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள பெயர்களை தமிழில் மாற்றி பயன்படுத்துவது; ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழ் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றி எழுதி வருவதை நிறுத்துவது குறித்து அரசாணை வெளியிட முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் வழக்கமாக Tamilnadu என எழுதுவதற்கு பதில் Tamizh Nadu என்று எழுதவேண்டும் என்றும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close