நிர்மலா தேவிக்கு அதிகாரிகள் மிரட்டல்: வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 10:03 am
authorities-threaten-to-nirmala-devi

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக அவரது வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

மதுரை மத்திய சிறையில் உள்ள கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நேற்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நிர்மலா தேவியை முக்கிய உயர் அதிகாரிகள் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை செய்தியாளர்களையோ அல்லது வேறு யாரையும் சந்திக்க கூடாது எனவும், வழக்கில் தொடர்புடையவர்கள் பெயரை கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்" எனத் தெரிவித்தார். 

மேலும், "வழக்கறிஞர்களை மாற்ற வேண்டும் எனவும், தேர்தல் முடிந்தவுடன் ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்" என்றும் அவர் கூறினார்.

"நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக அரசு மிகவும் மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அவர் ஜாமீனுக்கு அரசு தடை ஏற்படுத்தினால் நீதிமன்றத்திற்கு வரும்போது நிர்மலாதேவி தானாகவே பல்வேறு உண்மைகளை வெளியில் கொண்டு வருவார்" எனவும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டின் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close