சின்ன தம்பியை பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:44 pm
chinna-thambi-issue-farmers-struggle

சின்ன தம்பியை பிடிக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டு யானை "சின்னத்தம்பி"யை கடந்த 25ம் தேதி  வனத்துறையினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தி பிடித்து டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

ஆனால் கடந்த 28ம் தேதி மீண்டும் பொள்ளாச்சி பகுதியில் நுழைந்த சின்னதம்பி, கடந்த 5 நட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் சுற்றி வந்தது. கடந்த 5 நாட்களாக எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் சுற்றி வந்த சின்னதம்பி, அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகம், அங்கிருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ததையடுத்து அப்பகுதிக்குள் செல்ல மறுத்து, இன்று அதிகாலையில் அங்கிருந்து செங்கழனிபுதூா் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள கரும்பு, நெல் ஆகிய பயிர்களை சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து, சின்னதம்பியை பிடித்து செல்ல வலியுறுத்தி கிருஷ்ணாபுரத்தில் 100 -க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தால், கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும் வரை சின்னதம்பியை பிடிக்க முடியாது என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close