ஸ்டாலின் தலைமையில், நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:53 pm
dmk-mlas-meeting-held-in-chennai-tomorrow

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11 முதல் 16 வரை 5 நாட்கள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பற்றி விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் வர வேண்டும் என்றும் திமுக அறிவுறுத்தியுள்ளது.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close