கடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:35 pm
statue-for-rajaraja-chozhan-case-hearing-at-madurai-court

இந்திய பெருங்கடல் அல்லது வங்கக்கடல் பகுதியில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கௌரவிக்கும் பொருட்டு, அவருக்கு இந்திய பெருங்கடல் அல்லது வங்கக்கடலில் சிலை அமைக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது . 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close