வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணியில்லை என்றும் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், "நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது. எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இலக்கு. மக்களுக்கு நல்லதை பரிமாற முற்படும் போது அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உண்மை தான். அதேபோன்று டிடிவி தினகரன் கட்சியுடனும் இல்லை" என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
newstm.in