தற்கொலை தொடர்கிறது... ஒரே வாரத்தில் 4வது காவலர் தற்கொலை !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 03:08 pm
tamilnadu-police-suicide-continues

சென்னை நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் வீரவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வீரவேல். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்குச் சேர்ந்தார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். வீரவேல் சிறுநீரக பழுதின் காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தீவிர வயிற்று வலியின் காரணமாக வீரவேல் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்க தன் அறைக்கு சென்றவர் அறைக்கதவை பூட்டியுள்ளார். காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவரது மனைவி மீனாம்பாள் ஜன்னல் வழியே பார்த்தபோது வீரவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வீரவேலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கு காரணம் உடல்நலக் குறைவா அல்லது பணிச் சுமையா என்ற கோணத்தில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close