தேவநேயப் பாவாணரின் 118வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 03:14 pm
celebration-of-the-118th-birthday-of-pavanar

மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தவும் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.8.70 லட்சம் ஒதுக்கப்பட்டு  மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, கே.கே.நகர் பகுதியில் உள்ளஅவரது மணிமண்டபத்தில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, வரும் மார்ச் மாதம் அபுதாபியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மதுரையைச் சேர்ந்த அறிவுத் திறன் குறைந்த குழந்தைகள் ஆறு பேருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close