ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:08 pm
sterlite-case-hearing-at-sc

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். 

தூத்துக்குடி மாவட்ட மக்களின் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஆனால், வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையினை மீண்டும் திறக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த  வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருந்து வரும் நிலையில், இன்று விசாரணை முடிவடைந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், வழக்கில் எதிர்த்தரப்பினர் அனைவரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை பிப்ரவரி 11ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close